பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா
பாகிஸ்தான்
வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷிக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு
உள்ளது.
பாகிஸ்தானில்
வேகமாக பரவி வரும் கொரோனாவிடம் ஏராளமான அரசியல் தலைவர்களும் சிக்கி வருகின்றனர். இதில்
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித்தலைவர் ஷேபாஸ் ஷெரீப், நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத்
கெய்சர், சிந்து மாகாண கவர்னர் இம்ரான் இஸ்மாயில் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இதைப்போல
கொரோனாவிடம் சிக்கிய பல்வேறு தலைவர்கள் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷிக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘இன்று (நேற்று) பிற்பகலில் எனக்கு லேசான காய்ச்சல் இருந்தது. உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இறைவன் அருளால் வலிமையாகவும், சக்தியாகவும் உணர்கிறேன். எனது பணிகளை வீட்டில் இருந்தவாறே தொடர்வேன். தயவுசெய்து எனக்காக பிரார்த்தியுங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
கருத்துகள் இல்லை