பாகிஸ்தான் விமானிகளுக்கு வியட்நாம் அதிரடி தடை
பாகிஸ்தான் நாட்டின் விமான போக்குவரத்து துறை அமைச்சர், பாகிஸ்தானில் தற்போது 560-க்கும் மேற்பட்டோர் விமானிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 262 பேர் பாகிஸ்தான் பொது விமான கட்டுப்பாட்டு ஆணையத்தின் தேர்வில் குளறுபடி செய்து தேர்ச்சி பெற்றவர்கள் எனத் குளோபல் விமான போக்குவரத்து கட்டுபாட்டு ஆணையத்திற்கு தெரிவித்திருந்தது.
அதனடிப்படையில் வியட்நாம் நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் விமானிகளை உடனடியாக தரையிறக்க வேண்டும் என அநாட்டு விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது 27 பாகிஸ்தான் விமானிகள் வியட்நாம் விமானங்களை இயக்க பதிவு செய்து வைத்துள்ளனர். அதில் 12 பேர் பணி செய்து வருகிறார்கள். 11 பேர் வியட்ஜெட் ஏர் நிறுவனத்திலும், ஒருவர் ஜெட்ஸ்டார் பசிபிக் நிறுவனத்திலும் விமானங்களை இயக்கி வருகின்றனர். 15 பேர் பதிவு செய்து வைத்திருந்தாலும், நீண்ட காலமாக தொடர்பில் இல்லாமல் இருக்கின்றனர்.
262 பேரில் பெரும்பாலானோர்
பாகிகஸ்தான் சர்வதேச ஏர்லைன்சில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை