பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா
பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சரும், பிரதமரின் தனிப்பட்ட சுகாதாரத்துறை ஆலோசகருமான மருத்துவர் ஜாஃபர் மிர்ஸாவுக்கு கொரோனா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அமைச்சர் ஜாஃபர் மிர்ஸா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். கடந்த வாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கொரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரே பாதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை