உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்திய ரஷ்யா
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு மருத்துவம் மற்றும் பயோடெக்னாலஜி யக்குனர் வாடிம் தாராசோவ், செசோனோவ் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றி பெற்று உள்ளது என கூறி உள்ளார்.
ஜூன் மாதம் 18 ஆம் திகதி இந்த சோதனைகள் தொடங்கப்பட்டது. இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்து முதல் குழுவினர் வரும் புதன்கிழமையும், அடுத்த குழுவினர் வருகின்ற 20 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவார்கள். என்று தெரிவிக்கபடுகிறது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்துள்ளது.
இதன் மூலம் உலகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்ற 'முதல் நாடு' என்ற பெருமை ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது. எனினும், இந்த தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் தற்போது முக்கியமான சோதனை கட்டத்தில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை