Wednesday, January 8.

.பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிப்பு ட்ரம்ப்

dram
 
அமெரிக்காவில், பள்ளிகளை திறக்காவிடில், மாகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும் என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்காவில், கொரோனா அச்சுறுத்தலை மீறி, பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க, மாகாண அரசுகளுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நெருக்கடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து,  அவர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:ஜெர்மனி, டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளில், எந்த பிரச்னையும் இல்லாமல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இங்கு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை, அரசியல் காரணங்களுக்காக, ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர்.நவம்பர் தேர்தலுக்கு முன், பள்ளிகள் திறக்கப்பட்டால், அரசியல் ரீதியாக அவர்களின் நிலை மோசமாகும் என, ஜனநாயக கட்சியினர் கருதுகின்றனர். ஆனால், குழந்தைகளின் கல்விக்கு, பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இதையும் மீறி பள்ளிகளை திறக்காவிட்டால், மகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்


கருத்துகள் இல்லை

Post Top Ad

Post Bottom Ad