ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகல்
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், அணி பந்து வீச்சாளர், அணி நிர்வாகிகள் என 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணி சிஇஒ தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை