2021 டோக்கியோ ஒலிம்பிக் தீபம் அறிமுகம்
கொரோனா தாக்கம் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், 2021 ஜூலை 23-ல் தொடங்குகிறது. இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் அருங்காட்சியகத்தில் எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரபூர்வ தீபம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜப்பானில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், தற்போதுள்ள சூழலில் ஒலிம்பிக் போட்டியை மேலும் ஒத்திவைக்கலாம் என்று 54 விழுக்காடு மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், போட்டியை ரத்து வேண்டுமானாலும் செய்யலாம், ஒத்திவைக்க வாய்ப்பே இல்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை