• Breaking News

    யுஎஸ் ஓபன்: மகளிர் இரட்டையரில் ரஷ்ய,ஜெர்மன் ஜோடி சம்பியன்

     


    மகளிர் இரட்டையர் பிரிவுக்கான இறுதிச்சுற்று நேற்று நடந்தது. இதில் ரஷ்யாவின் வேரா வோனரவேரா, ஜெர்மனியின் லாரா சீஜ்முன்ட் ஜோடியை எதிர்த்து தரநிலையில் 3-ம் இடத்தில் உள்ள சீனாவின் உ இபான், அமெரிக்காவின் நிகோல் மெலிகர் ஜோடி மோதியது.

    இதில் உ இபான், நிகோல் மெலிகர் இணையை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வேரா வோனரவேரா, ஜெர்மனியின் லாரா சீஜ்முன்ட் ஜோடி வென்றது. இவர்களுக்கு பரிசுக் கோப்பையும், 4 லட்சம் டொலர் பணமும் பரிசாக வழங்கப்பட்டன.

    36 வயதாகும் வேனரவேரா இதற்கு முன் கடந்த 2006ல் நாதாலியே டெக்கேயுடன் இணைந்து விளையாடி, யுஎஸ் ஓபனில் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபனில் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தையும் பெற்றார்.அந்த இறுதிஆட்டத்தில் கிம் கிளைஸ்டரிடம் தோல்வி அடைந்தார்.

    கடந்த 2012ம் ஆண்டில் அவுஸ்திரேலியன் ஓபன் போட்டியில் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற வோனரேவா, 2016-ம் ஆண்டில் குழந்தை பிறந்தபின் விளையாடமல்இருந்து வந்து தற்போது பட்டம் வென்றுள்ளார்.

     




     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad