• Breaking News

    அதிரடியால் பதிலளித்த அம்பதி ராயுடு


     மும்பைக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி ஆட்டம் மூலமா அம்பதி ராயுடு முக்கிய செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் முக்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க டுப்ளசிஸ்ஸுடன் இணைந்த ராயுடு வெற்றிக்காக அடித்தளமிட்டார்.

    முதலில் மெதுவாக ஆடினாலும் போக போக அம்பதி ராயுடு வேகம் காட்டதொடங்கினார். தேவையான பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து அதிரடி காட்டினார். வேகமாக ஆட தொடங்கிய ராயுடு இந்த தொடரின் முதல் வீரராக 50 ஓட்டங்களைகடந்து 71 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மிகவும் கடுமையான பிட்சில், வலிமையான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு, அம்பதி ராயுடு கலக்கினார்.

      இவர் பார்ம் அவுட்டில் இருக்கிறார். சரியாக ஆட மாட்டார் என்று இவருக்கு எதிராக நிறைய கணிப்புகள் வைக்கப்பட்டது. ஆனால் அம்பதி ராயுடு எதையும் கருத்தில் கொள்ளாமல் கவலையே இன்றி களத்தில் நிதானமாக ஆடினார். இதன் மூலம் தனக்கு எதிரான சில விமர்சனங்களுக்கு இவர் பதிலடி கொடுத்துள்ளார்.

     கடந்த உலகக் கிண்ணத் தொடரில், தன்னை அணியில் எடுக்கவில்லை என்று கடுமையாக புகார்களை வைத்தார். விஜய் சங்கர் போன்றஅனுபவம் இல்லாத வீரர்களை அணியில் எடுத்ததை இவர் கிண்டல் செய்து இருந்தார். ஆனால் இவருக்கு எதிராக தேர்வு கமிட்டி கடுமையாக புகார்களை குவித்து, விமர்சனங்களை வைத்தது.

     விஜய் சங்கரை 3டி வீரர் என்று அம்பதி ராயுடு கிண்டல் செய்து இருந்த நிகழ்வும் நடந்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர் புறக்கணிப்பு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக  அம்பதி ராயுடு அறிவித்தார். அதன்பின் மீண்டும் ஓய்வில் இருந்து திரும்பி வந்தார். ஆனால் இவருக்கு அணியில் யாரும் வாய்ப்பு கொடுக்கவே இல்லை

     இந்திய அணியில் நான்காவது இடத்தில் விளையாட வேண்டும் என்பதுதான் இவரின் ஒரே நோக்கம். அந்த இடத்திற்கு நான்தான் சரியான ஆள்என்பதை மும்பைக்கு எதிரான‌ போட்டியின் மூலம் ராயுடு நிரூபித்து இருக்கிறார் . தனக்கு எதிரான விமர்சனங்கள், தேர்வு குழுவின் அவமானங்களுக்கு எல்லாம் ஒரே போட்டியில் ராயுடு பதிலடி கொடுத்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad