• Breaking News

    ஐபிஎல்லில் டோனியின் சாதனைகள்


      டோனி இன்னும் 4 சிக்ஸ் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் வீரர் ஒருவரை முந்த உள்ளார்.

    டோனி கடைசியாக 2019 ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடி இருந்தார். அதன் பின் உள்ளூர் போட்டிகளிலும் அவர் ஆடவில்லை. சுமார் 14 மாதங்கள் எந்த கிரிக்கெட் போட்டியும் ஆடாத நிலையில் அவர் இருக்கிறார்.

     இந்த நிலையில், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்-இன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு டோனிக்கு கிடைத்துள்ளது. டோனி ஐபிஎல் தொடரில் 209 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

     இரண்டாம் இடத்தில் ஏபி டிவில்லியர்ஸ் இருக்கிறார். அவர் 212 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் 4 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் தோனி, டி வில்லியர்ஸ்-ஐ வீழ்த்த முடியும். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிப்பார்.

     இதே அதிக சிக்ஸர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கிறிஸ் கெயில். அவர் ஐபிஎல் தொடரில் 326 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை வேறு யாரும் நெருங்க முடியாத நிலையே உள்ளது. டோனி சிக்ஸர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கா விட்டாலும் வேறு பல ஐபிஎல் சாதனைப் பட்டியல்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

    அதிக ஐபிஎல் போட்டிகளுக்கு கப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் டோனி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் சிஎஸ்கே அணிக்கு 10 சீசன்களிலும், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒரு சீசனிலும் கப்டனாக செயல்பட்டுள்ளார். மொத்தம் 174 ஐபிஎல் போட்டிகளுக்கு கப்டனாக செயல்பட்டுள்ளார்.



     அதே போல, அதிக ஐபிஎல் போட்டிகளை வென்று கொடுத்த கப்டன் என்ற சாதனையும் தோனி வசமே உள்ளது. 174 போட்டிகளில் 104 போட்டிகளை வென்று கொடுத்துள்ளார் கப்டன் தோனி. அவரது வெற்றி சராசரி 60.11 ஆகும்.
     கப்டன்சி மட்டுமின்றி, விக்கெட் கீப்பிங்கிலும் சாதனை புரிந்துள்ளார் டோனி ஐபிஎல் தொடரில் 132 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார் டோனி. அதில் 38 ஸ்டம்பிங் அடக்கம். ஐபிஎல் தொடரில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பரும் டோனியே.

    ஐபிஎல்லில் 100 கச் பிடித்த வீரராகவும் டோனி மிளிர்கிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad