ஐ.பி.எல். போட்டியில் இருந்து மலிங்கா திடீர் விலகல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்த இலங்கையின் மலிங்கா, வருகிற 19-ஆம் திகதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஐ.பி.எல். போட்டியை துறந்துள்ளார். 37 வயதான மலிங்கா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (122 ஆட்டத்தில் 170 விக்கெட்) வீழ்த்திய பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
மலிங்க விலகியது மும்பைக்கு பின்னடைவு தான். அவருக்கு பதிலாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் மும்பை அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 30 வயதான பேட்டின்சன் இதுவரை ஐ.பி.எல்.-ல் விளையாடியது கிடையாது.
விளையாட்டு
கருத்துகள் இல்லை