அறிமுகப் போட்டியில் அரை சதம் அடிக்கும் தேவ்தத் படிக்கல்
ஹைதராபாத் அணிக்கு
எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் வீரர் தேவ்தத் படிக்கல் அற்புதமாக விளையாடி ஐபிஎல்
கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். பெங்களூர் அணிக்காக புதிதாக
இறங்கி இருக்கும் தேவ்தத் படிக்கல் முதல் போட்டியிலேயே அனைவரையும் கவர்ந்துள்ளார்.
பெங்களூர் அணிக்காக களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லின்
முதல் போட்டி இதுதான். ஆம் ஐபிஎல் போட்டியில் இதுதான் அவரின் முதல் போட்டி. இதுவரை
பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு இருந்த தேவ்துத் படிக்கல்லுக்கு ஹோலி வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து பயிற்சி ஆட்டங்களில்
இவரின் ஸ்டைல் பிடித்து போய், ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக இறங்க வாய்ப்பு கொடுத்தார்
ஹோலி.
ரஞ்சி போட்டி
அண்டர் 19 இந்திய அணி போட்டி இரண்டின் மூலம்தான் தேவ்தத் படிக்கல், ஹோலியின் கவனத்தை
ஈர்த்தார். அண்டர் 19 அணியில் இவர் நன்றாக விளையாடினார். ரஞ்சி கோப்பை போட்டியில் இவரின்
ஆட்டம் சிறப்பாக இருந்த காரணத்தால் அண்டர் 19 அணிக்கு தேர்வானார். கர்நாடகா ரஞ்சி அணிக்காக
இவர் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 2018ல் 77 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அண்டர் 19 அணியிலும் தேவ்தத் படிக்கல் சிறப்பாக
ஆடினார். இதன் காரணமாகவும், கர்நாடக கிரிக்கெட் வாரியம் இவர் மீது வைத்த நம்பிக்கை
காரணமாகவும் இவருக்கு பெங்களூர் அணியில் வாய்ப்பு கிடைத்தது. வெறும் 20 லட்சம் ரூபாய்க்குதான்
2019 ஐபிஎல் போட்டிக்கு முன்பாக இவர் பெங்களூர் அணியில் எடுக்கப்பட்டார்.
கர்நாடக அணிக்காக
விஜய் ஹாசரே போட்டியில் 2019-20ல் இவர்தான் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர். 11 போட்டிகளில்
609 ஓட்டங்கள் குவித்தார். அதேபோல் தியோடர் கோப்பை, சயீத் முஸ்தாக் அலி கோப்பை என்று
பல தொடர்களில் கர்நாடக அணிக்காக விளையாடி இருக்கிறார். ஆனால் ஆனால் இவர் கர்நாடக மாநிலத்தை
சேர்ந்தவர் கிடையாது. 2000ல் கேரளாவில் இருக்கும் எடப்பால் என்ற ஊரில் பிறந்தவர். அதன்பின்
ஹைதராபாத் சென்று அங்கு வளர்ந்தார்.பின் பெங்களூர் சென்ரார்.
பெங்களூர் கர்நாடக கிரிக்கெட் மையத்தில் பயிற்சி
பெற்றார். 2014ல் இருந்து இவர் கர்நாடக மாநில அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய
அணியில் கேரள வீரர்கள் இல்லாத நிலையில் இவர் கவனம் ஈர்த்து உள்ளார்.
அறிமுகப் போட்டியில் படிக்கல்லின் அரைச் சதங்கள்: ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு 42 பந்துகளை சந்தித்த இவர் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2018 ஆம் ஆண்டு முதல் தர போட்டியில் 77 ஓட்டங்கள். 2019 ஆம் ஆண்டு இந்திய ஏ அணி 58 ஓட்டங்ககள். 2019 ஆம் ஆண்டு உள்ளூர் ரி20 53 ஓட்டங்கள்
கருத்துகள் இல்லை