Wednesday, January 8.
  • Breaking News

    அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அவுஸ்திரேலிய வீரர்


     

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர் டொமினிக் தீம், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் டொமினிக் தீம், 6-2, 7-6, 7-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை தீம் பெற்றுள்ளார். 

    முதல் செட்டை எளிதாக வென்றபிறகு, அடுத்த செட்களும் எளிதாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் டைபிரேக்கர் வரை நீடித்தது. கடைசி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது. இரண்டு டைபிரேக்குகளும் ஆச்சரியமாக இருந்ததுஎன டொமினிக் தீம் தெரிவித்துள்ளார்.


     

    முன்னதாக  நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஸ்பெயின் வீரர் பாப்லோ காரனோ பஸ்டாவை 3-6, 2-6, 6-3, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் போராடி வென்றார். இதன்மூலம் 1994க்கு பிறகு அமெரிக்க ஒபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜேர்மன் வீரர் என்ற பெருமையை அலெக்சாண்டர்  பெற்றுள்ளார். 

    சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதில் டொமினிக் தீம், அலெக்சாண்டர் ஸ்வெரெவ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். 

    கடந்த 1994-ம் ஆண்டு ஜேர்மன் வீரர் மைக்கேல் ஸ்டிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார். அதன்பின் ஏறக்குறைய 26 ஆண்டுகளாக எந்த ஜேர்மன் வீரரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறாத நிலையில் இப்போது அலெக்சாண்டர் தகுதிபெற்றுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad