சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன் சிங் விலகல்
சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு சென்றுள்ளது. ஹர்பஜன் சிங் அணியுடன் அப்போது செல்லவில்லை. ஹோட்டல் அறையில் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் துணைக் கப்டன் சுரேஷ் ரெய்னா சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகினார்.
இந்நிலையில் ஹர்பஜன் சிங்கும் சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்து சேர்ந்தார். அப்போது ஹர்பஜன் சிங்கிற்கு 37 வயதானதால் எந்த அணியும் தேர்வு செய்து என கருதப்பட்டது.
எனினும், சிஎஸ்கே அணி அவரை தேர்வு செய்து வியக்க வைத்தது. கேப்டன் தோனி, ஹர்பஜன் சிங்கை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி முக்கிய போட்டிகளில் அணியை வெற்றி பெற வைத்தார். அதன் மூலம் ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக மாறினார்.
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்பஜன் சிங் விலகி உள்ளார். துபாயில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஹர்பஜன் சிங் இந்த முடிவை எடுத்ததாக சிலர் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை