டெல்லியை வீழ்த்தி மும்பை 5-வது வெற்றி
அபுதாபியில் நேற்றிரவு நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. ராஜஸ்தான் அணியில் காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு பதிலாக அலெக்ஸ் கேரி இடம் பிடித்தார். இதே போல் ஹெட்மயர் நீக்கப்பட்டு ரஹானே சேர்க்கப்பட்டார்
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுபெடுத்தாடியது. முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா (4 ஓட்டங்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர் ஷிகர் தவான் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் பெரிய அளவில் அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. மறுமுனையில் ரஹானே (15 ஓட்டங்கள்), கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (42 ஓட்டங்கள்), ஸ்டோனிஸ் (13 ஓட்டங்கள்) சீரான இடைவெளியில் வெளியேறினர்.
20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது. இந்த சீசனில் முதல்முறையாக அரைசதம் கடந்த ஷிகர் தவான் 69 ஓட்டங்களுடனும் (52 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), அலெக்ஸ் கேரி 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
மும்பை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் (11 ஓட்டங்கள்), குருணல் பாண்ட்யா (12 ஓட்டங்கள்) அவுட் ஆகாமல் நின்றனர்.
7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதன் மூலம் 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை எட்டிப்பிடித்தது. டெல்லிக்கு 2-வது தோல்வியாகும்.
கருத்துகள் இல்லை