5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்
ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணியின் கப்டன் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் விளையாடின.
இறுதி வரையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரிகளுடன் 47 (33) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சாதனையும் படைத்துள்ளார். இந்த போட்டியில் டேவிட் வார்னர் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார். அவருக்கு முன் விராட் கோலி (5,759), ரெய்னா (5,368), ரோகித் சர்மா (5,149) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். எனினும், வார்னர் மற்ற வீரர்களை விட குறைவான போட்டிகளில் விளையாடி (135), அதிவேகமாக 5 ஆயிரம் ஓட்டங்ள் என்ற இலக்கை கடந்துள்ளார்.
இதேபோன்று, ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் சன்ரைசர்ஸ் அணியின் கப்டன் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை