7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி
துபாயில் நடைபெற்ற 33வது ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின.
நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கப்டன் ஸ்டீவன் சுமித் 57 ஓட்டங்கள் எடுத்தார். பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளும், சாஹல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் பட்டிக்கல் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் பிஞ்ச் 14(11) ஓட்டங்களும், பட்டிக்கல் 35(37) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய கப்டன் விராட் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த நிலையில் 43(32) ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்ததாக டி வில்லியர்ஸ், குருகீரத் சிங் அகியோர் ஜோடி சிதறடித்தார்.
இறுதியில் அரைசதத்தை பதிவு செய்த டி வில்லியர்ஸ் 55(22) ஓட்டங்களும், குருகீரத் சிங் 19(17)ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் பெங்களூரு அணி 19.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக கோபால், கார்த்திக் தியாகி மற்றும் தேவாட்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.
கருத்துகள் இல்லை