• Breaking News

    சென்னைக்கு மூன்றாவது வெற்றி

       துபாயில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில்   சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக தமிழக வீரர் ஜெகதீசன் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா சேர்க்கப்பட்டார். 

    நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற  சென்னை கப்டன் டோனி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். இந்த சீசனில் சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவது  இதுவே முதல்தடவையாகும்.

    20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்கள் சேர்த்தது ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


     

    துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்யப்பட்டது, வாட்சன் 2-வது வரிசைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து சாம் கர்ரனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.  . பிளிஸ்சிஸ் (0) சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சிக்கினார். இதன் பின்னர் சாம் கர்ரனுடன், ஷேன் வாட்சன் இணைந்தார். கலீல் அகமதுவின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் விரட்டி அமர்க்களப்படுத்திய சாம்கர்ரன் (31 ஓட்டங்கள், 21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) சந்தீப் ஷர்மாவின் பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார் சாம் கர்ரன்னின் அடித்தளம் சென்னைக்குக் கைகொடுத்தது.. 

     வாட்சனும், அம்பத்தி ராயுடும் கைகோர்த்து   சீரான வேகத்தில் ஓட்டங்கலைக் குவித்தனர் 15.2 ஓவர்களில் 116 ஓட்டங்கள் எடுத்தபோது ராயுடு 41 ஓட்டங்களிலும்(34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்)   ஷேன் வாட்சன் 42 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.  (38 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினர்..

    இதன் பின்னர் கப்டன் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். நடராஜனின் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி ஓடவிட்ட டோனி அவரது மற்றொரு ஓவரில் 102 மீற்றர் தூரத்திற்கு பிரமாதமான ஒரு சிக்சரை நொறுக்கினார். ஆனால்   நடராஜனின் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.  டோனி  21 ஓட்டங்கள்(  13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்த போது  ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிராவோ ஓட்டமெடுக்காது ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஜடேஜா பவுண்டரி, சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை 160 ஓட்டங்களை கடக்க வைத்தார். 

    20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்கள் சேர்த்தது. ஜடேஜா 25 ஓட்டங்களுடனும் (10 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), தீபக் சாஹர் 2 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் டி.நடராஜன், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


      168 ஓட்டங்கள் எனும்  இலக்கை நோக்கி களம் கண்ட ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை சென்னை பந்து வீச்சாளர்கள் சீக்கிரம் வெளியேற்றினர். கப்டன் டேவிட் வார்னர் (9 ஓட்டங்கள்), சாம்கர்ரனின் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.   மற்றொரு தொடக்க வீரர் பேர்ஸ்டோ (23 ஓட்டங்கள்) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய மனிஷ் பாண்டே (4 ஓட்டங்கள்) ரன்-அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் 59 ஓட்டங்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ஐதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் நம்பிக்கை கொடுத்தார். நேர்த்தியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். இருப்பினும் ரவெற்ரிக்கான ஓட்ட விகிதம் அதிகரித்துக் கொண்டே போனதால் அவரும் நெருக்கடிக்குள்ளானார். மறுமுனையில் பிரியம் கார்க் 16 ஓட்டங்களிலும், விஜய் சங்கர் 12 ஓட்டங்களிலும் வெளியேறினர். 

    சென்னை அணியினரை அச்சுறுத்திக்கொண்டிருந்த வில்லியம்சன்( 57 ஓட்டங்கள், 39 பந்து, 7 பவுண்டரி) 18-வது ஓவரில் கரண் ஷர்மாவின் பந்து வீச்சை சிக்சருக்கு அடிக்க முயற்சித்து  பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகே சென்னை வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அடுத்து வந்த ரஷித்கான் 14 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தார். ஆனார். பரபரப்பான கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 22 ஓட்டங்கள்தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய மிதவேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பிராவோ ஒரு ஓட்டம் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தி சிக்கலின்றி வெற்றியை உறுதி செய்தார். 

    ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    . சென்னை தரப்பில் கரண் ஷர்மா, வெய்ன் பிராவோ ஆகியோர்  தலா 2 விக்கெட்டும், சாம் கர்ரன், ஜடேஜா, ஷர்துல் தாகூர்  ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது வெற்றியாகும். ஏற்கனவே இதே மைதானத்தில் ஐதராபாத்திடம் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தீல் சென்னை தோல்வியடைந்தது. ஐதராபாத்துக்கு இது 5-வது தோல்வியாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad