பஞ்சாப்புக்கு இரண்டாவது வெற்றி
ஐ.பி.எல்.,தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப்.
நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூருவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுஐக்கிய
அரபு எமிரேட்சில் 13வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில்
பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி கப்டன் கோஹ்லி,
துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.
பெங்களூரு அணிக்கு பின்ச் (20), தேவ்தத் படிக்கல் (18) ஜோடி வேகமான
துவக்கம் கொடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 14 பந்தில் 13 ஓட்டங்கள் மட்டும் எடுத்து வெளியேறினார்.
ஷிவம் துபே (23), ஜோர்டன் வேகத்தில் வீழ்ந்தார்.ஷமி வீசிய 18வது ஓவரில் டிவிலியர்ஸ்
(2), கோஹ்லி (48) இருவரும் வெளியேறினர், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை
இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தது. மோரிஸ் (25), உதனா (10) ஆகியோர் ஆட்டமிழக்கவில்லை
பஞ்சாப் அணிக்கு ராகுல், மயங்க் அகர்வால் (45) ஜோடி மின்னல் வேக துவக்கம் தந்தது. ராகுல் 20வது, கெய்ல் 29வது ஐ.பி.எல்., அரைசதம் அடித்தனர். சகால் வீசிய கடைசி ஓவரில் 2 ஓடங்கள் தேவைப்பட்டன. கெய்ல் (53) ஆட்டமிழக்க, 5 பந்தில் 1 ஓட்டம் மட்டும் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் பூரன் சிக்சர் அடிக்க பஞ்சாப் 'திரில்' வெற்றி பெற்றது.
கருத்துகள் இல்லை