• Breaking News

    சூப்பர் ஓவரில் கொல்கட்டா வெற்றி


     

     துபாயில் நடைபெற்ற .பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. 

    நாணயச் சுழற்சியில்  வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில் 36 ஓட்டங்கள் எடுத்தார். ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் மற்றும் ரஷித் கான், பாசில் தம்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர் 

    பின்னர் 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சார்பில் பேரிஸ்டோவ் மற்றும் கேன் வில்லியம்சம் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக துவங்கிய இந்த ஜோடியில் கேன் வில்லியம்சன் 29(19) ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய கார்க் 4(7) ஓட்டங்களும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பேரிஸ்டோவ் 36(28) ஓட்டங்களும், மணீஷ் பாண்டே 6(7) ஓட்டங்களும், விஜய் சங்கர் 7(10) ஓட்டங்களும், அப்துல் சமத் 23(15) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

    இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கப்டன் டேவிட் வார்னர் 47(33) ஓட்டங்களும், ரஷித் கான் 1(2) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஃபர்குசன் 3 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது 

    சூப்பர் ஓவரில் ஐதராபாத் முதலில்துடுப்பெடுத்தாடியது.  கனின்ஸ் பந்து வீசினார்..வார்னர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் சமன் 2 இரண்டு ஓட்டங்கள் அடிக்க 3-வது பந்திலும் இவர் விக்கெட்டைப் பரிகொடுத்தார்.இதனால் 3 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் களம் இறங்கி 3 பந்தில் 3 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad