• Breaking News

    பஞ்சாப்பை வென்று முன்னேறியது சென்னை


     

     துபாயில் .பி.எல். கிரிக்கெட்டின் 18-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.  தொடர் தோல்விகளால் துவண்டிருந்த இரண்டு அணிகளுக்கும் வெற்றி முக்கியமானதாக இருந்தது.

    பஞ்சாப்புக்கு எதிரான் போட்டியில் விக்கெட்டை இழக்காமல் 181 ஓட்டங்கள் எடுத்த சென்னை சாதனையுடன் வெற்றி பெற்றது.

    நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.  கப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்த ஜோடியில் மயங்க் அகர்வால் 26(19) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய மன்தீப்சிங் 27(16) ஓட்டங்களும், நிகோலஸ் பூரன் 33(17) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே,எல்.ராகுல், தனது அரைசதத்தை பதிவு செய்தநிலையில் 63(52) ஓட்டங்களில் வெளியேறினார்.

     


    இறுதியில் மேக்ஸ்வெல் 11(7) ஓட்டங்களும், சர்ப்ரஸ் கான் 14(9) ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் 

    முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 63 ஓட்டங்கள் எடுத்தார். சென்னை அணியின் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்களும், ஜடேஜா, பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்  

    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணிக்கு 179 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

      சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன், பிளெஸ்சிஸ் ஆகிய இருவரும்தொடக்கம் முதல் அடித்து ஆட தொடங்கினர்இதனால் அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்ததுவாட்சன் 83 ஓட்டங்களும் , பிளெஸ்சிஸ் 87 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்இதில் சாதனை அளவாக இரண்டு வீரர்களும் 53 பந்துகளை சந்தித்திருந்தனர்இருவரும் 11 பவுண்டரிகளை விளாசினர்.


     

    வாட்சன் 3 சிக்சர்களும், பிளெஸ்சிஸ் 1 சிக்சரும் விளாசியிருந்தனர்சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ஓட்டங்கள் எடுத்ததுஇதனால், இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad