ரெய்னாவின் சாதனையை சமன் செய்த ரோஹித்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக அரைசதம் அடித்ததன் மூலம் ரெய்னாவின் சாதனையை ரோஹித் சர்மா சுரேஷ் சமன் செய்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 2 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஐ.பி.எல். தொடரில் 5,000 ஓட்டங்களை கடந்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 3-வது வீரராக, தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோஹ்லி 5,430 ஓட்டங்களுடன் முதல் இடத்திலும், 5,368 ஓட்டங்களுடன் சுரேஷ் ரெய்னா 2-வது இடத்திலும் உள்ளனர்.
அரைசதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் சாதனைப் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா 38 அரைசதங்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். தற்போது ரோஹித் சர்மா அவருடன் இணைந்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடும் டேவிட் வார்னர் 44 அரைசதங்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
கருத்துகள் இல்லை