நாட்டில் 200 கர்ப்பிணிகளுக்கு கொரோனா!- வெளியாகியது அதிர்ச்சித் தகவல்
கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்ட சுமார் 200 கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் குழந்தைகளை பிரசவித்த சுமார் 25 தாய்மார்கள் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கர்ப்பிணி பெண்களை அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிர்த்து கொள்ளுமாறும் குடும்பநல பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கோரியுள்ளார்.
கருத்துகள் இல்லை