நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பேருந்து சாரதி!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பலங்கொடை டிப்போவில் 30 வருடங்கள் சாரதியாக பணியாற்றிய சமன் ஹேம குமார என்பவர் நேற்றைய தினம் ஓய்வு பெற்றுள்ளார்.
அவர் 30 வருடங்கள் பணியாற்றிய தனது பேருந்திற்கு முன்னால் மண்டியிட்டு வணங்கி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தான் பணியாற்றிய காலப்பகுதியில் பலங்கொடை - ராஸ்ஸகல வீதி உட்பட பல வீடுகளில் பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களை பணிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அத்துடன் ஏனைய பயணிகளுக்கான சேவையையும் அவர் தாமதமின்றி உரிய நேரத்தில் மேற்கொண்டமையினால் அவர் அனைவரதும் பாராட்டுக்களை பெற்ற ஒரு சாரதியாவார்.
இந்நிலையில் நேற்று ஓய்வு பெற்றவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்கு மண்டியிட்டு வணங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. தொழில் மீதான அவரது ஈர்ப்பினை பலரும் பாராட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை