கூரையின் மீதேறி கைதிகள் மீண்டும் போராட்டத்தில்!
வெலிக்கடை மற்றும் மஹர சிறைகளில் உள்ள கைதிகள் மூன்றாம் நாளாக இன்று சிறைச்சாலைகளின் கூரைகளில் ஏறி உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை தொடர்வதாக சிறைச் சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கைதிகள் நேற்று போராட்டத்தை கைவிட்டதாக அறிவித்தனர், ஆனால் அவர்கள் இன்று அதை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவித்ததை அடுத்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கைதிகள் தமது மரண தண்டனையை ஆயுள் தண்டணையாக மாற்றக் கோரி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் உணவுத் தவிர்ப்பை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இன்று கைதிகள் தங்கள் காலை உணவை ஏற்கவில்லை என்று சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை