ஸ்ரீலங்காவிற்குள் உள்நுழைந்ததா அமெரிக்க இராணுவம்? வெடித்தது அடுத்த சர்ச்சை
ஸ்ரீலங்காவிற்குள் அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் வந்து சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்காவிற்குள் பிரவேசித்த அமெரிக்காவின் இராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார் என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அமெரிக்க இராணுவ முன்னாள் அதிகாரி Mark Birnboum என்பவரே இவ்வாறு நாட்டில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி சுற்றுலா விசா ஊடாக மேலும் 4 அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாகவும் அதுகுறித்து தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
USAID என்ற அரச சார்பற்ற நிறுவனம் இவர்களை ஸ்ரீலங்காவிற்குள் அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இது தொடர்பில் அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எதுவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை