பஸிலின் உதவி தேவையில்லை - அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீளவும் குறைப்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவின் உதவி அவசியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றையதினம் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் கவலை அடைந்துள்ளனர். கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
எரிபொருள் விலை ஏற்றத்திற்கு ஆளும் கட்சியில் உள்ள அனைவரும் எதிர்ப்பாகவே உள்ளனர். எனினும் வேறு வழியின்றி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சரான பின்னர் எரிபொருள் விலை குறைக்கப்படும் என கூறப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கெஹெலிய ரம்புக்வெல்ல, அது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது கருத்து எனவும் அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லை எனவும் எரிபொருள் விலையை குறைப்பதற்கு பசில் ராஜபக்ஷவின் உதவி அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை