ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐ.தே.க எடுத்துள்ள அதிரடி முடிவு!
வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களை இலக்காகக் கொண்டு கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
பல சமீபத்திய மாற்றங்கள் காரணமாக, கட்சியிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொண்ட பலர் மீண்டும் வந்து கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி அடிமட்ட வாக்காளர்களுடன் இணைந்து பணியாற்றவும் கட்சியின் கொள்கைகளை அவர்களுக்கு தெரிவிக்கவும் தயாராகி வருகிறது.
இதற்கிடையில், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், மேலும் பலர் தீவிர அரசியலுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை