உயர்தரப் பரீட்சை எப்போது நடத்தப்படும்? கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!
இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எப்போது நடாத்தப்படும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் உயர்தரப் பரீட்சை நடாத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் உயர்தரப்பரீட்சை திட்டமிட்ட அடிப்படையில் நடாத்த முடியவில்லை.
இந்த நிலையில் உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாகவும் உயர்தரப் பரீட்சை நடாத்தும் திகதிகள் பற்றி அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோவிட் நிலைமைகளினால் இன்னமும் பாடசாலைகள் திறக்கப்படாதுள்ள நிலையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை