• Breaking News

    இங்கிலாந்தில் புகைபிடித்த, இலங்கை கிரிக்கெட் வீரர்!

    இங்கிலாந்துக்கு கிரிக்கெட் தொடருக்காக சென்ற ஸ்ரீலங்கா அணி வீரர்கள் வீதி ஒன்றில் புகைப்பிடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சமுக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

    இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இலங்கை அணி உப தலைவர் குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நடு வீதியில் புகைபிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளது.

    அத்துடன் தனுஸ்க குணதிலகவும் இவர்களுடன் இருப்பது தெரிகிறது. கொரோனா பாதுகாப்புக்கு உட்பட்டு சுற்றுலா சென்றுள்ள வீரர்கள் அதனை மீறி செயற்பட்டுள்ளார்களா எனவும் வீடியோவில் உள்ள விடயம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad