முதியோர் இல்லத்தில் வசித்துவந்த முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு!
யாழில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய முதியவர் ஒருவர் இன்றைய தினம் (2021.06.30) உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது,
தொல்புரம், சிவபூமி முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 67 வயதுடைய முதியவர் கடந்த சில தினங்களுக்கு முதல் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை