சுமந்திரனுக்குச் சீன தூதரகம் கொடுத்த பதிலடி!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் சீனப் பிரஜை என அடையாளப்படுத்தப்பட்ட நபர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமியர் என்பது தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் போது, சீன பிரஜைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக அவர் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
இது தொடர்பில் அவர் தனது ருவிட்டர் தளத்தில் குறித்த நபரின் பபடத்தை வெளியிட்டு, யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும்போது சீன தொழிலாளர்களிற்கு வாய்ப்பளிப்பது ஏன் என கேள்வி எழுப்பி பதிவொன்றினை செய்திருந்தார்.
எனினும் அவரது குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என ஆதாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட பதிவில் உள்ளவர் சீன நாட்டவர் அல்ல எனவும் அவர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இதனை அறிவித்துள்ளது.
சீனப் பிரஜை என சுமந்திரனால் அடையாளப்படுத்தப்பட்ட நபர் அக்கரைப்பற்றை சேர்ந்த மொஹமட் ஹனிபா என்பவரே சீனப் பிரஜை என சுமந்திரனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவினை தற்போது நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை