விடுதலைப் புலிகளின் ஆடையை ஒத்த சீருடை விவகாரத்தை சுட்டிக்காட்டி தேரர் சீற்றம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடையை ஒத்த சீருடையை அணிந்தவர்களை கைது செய்த இலங்கைச் சட்டம், இன்று சீன இராணுவத்தின் சீருடையை அணிந்தவர்களுக்கு எதிராக மௌனமாக இருப்பது ஏன் என அக்மீமன தயாரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், சீன இராணுவத்தை இந்த நாட்டிற்கு எவ்வாறு வழரவழைத்தார்கள்? வேறு நாட்டு இராணுவத்தை உள்நாட்டு விடயங்களில் எவ்வாறு ஈடுபடுத்தினார்கள்.
இந்த நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயமல்லவா இது? இதற்கு பொறுப்புக்கூறப்போது யார்? என வினவியுள்ளார்.
கருத்துகள் இல்லை