ஈராண்டில் ராஜபக்சர்களின் சாதனை என்ன? கண்ணீர் சிந்தும் பௌத்த தேரர்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை ஆட்சியில் அமர்த்தியமையால் பௌத்த தேரர்கள், கண்ணீர் சிந்துவதோடு, ஆத்திரமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனக்கு வாக்களித்த மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டு மக்களை நடு வீதியில் நிறுத்தி போராட்டம் நடத்த வைத்தமையே தற்போதைய கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டு வருட சாதனை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை