பொலிஸாருக்குக் கிடைத்த இரகசித் தகவல்! 10 லட்சம் பெறுமதியான பொருள்கள் மீட்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பானா பகுதியில் இருந்து கடத்தப்படவிருந்த சுமார் பத்து லட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 5 பேர் தப்பி ஒடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சுமார் பத்து லட்சம் பெறுதியான முதிரை மரக்குற்றிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன் தப்பி ஓடிய ஏனையவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் மரங்களை மீட்டதோடு ஒருவரை கைது செய்தனர்.
குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Get in Touch With Us to Know More

கருத்துகள் இல்லை