15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம்! இதுவரை 21 பேர் கைது - அஜித் ரோஹன
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தலைவர் மற்றும் ஒரு முன்னணி தொழிலதிபர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக இதுவரை 21 பேரைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
35 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து, இந்த செயலுக்குப் பணம் செலுத்திய பலரைக் கைது செய்ய காவல்துறை விசாரணையை ஆரம்பித்தது.
முன்னதாக, இந்த 15 வயது சிறுமியை பாலியல் வேலைக்காக ஈடுபடுத்தியதற்காகக் கொழும்பு கல்கிசையில் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இவர் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக சமூக ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டிருந்தமை தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய், முச்சக்கரவண்டி ஓட்டுநர், கார் ஓட்டுநர் மற்றும் விளம்பரத்திற்காக வலைத்தளத்தை வடிவமைத்தவர் உட்பட 17 சந்தேக நபர்களை பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
இந்த விபச்சார விடுதி கல்கிஸ்ஸையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வந்தது. இங்கு வைத்தே 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை