15 வயது சிறுமி துஷ்பிரயோகம் - ஸ்ரீலங்கா கடற்படை வெளியிட்ட அறிவிப்பு
15 வயது சிறுமி துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்த இதய சத்திரசிகிச்சை நிபுணரை பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
கடற்படை செய்தித் தொடர்பாளர் கப்டன் இந்திக டி சில்வா கூறுகையில், கடற்படைத் தளபதி குறித்த வைத்திய அதிகாரியின் சேவையை இன்று முதல் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக கடற்படை இதய அறுவை சிகிச்சை நிபுணர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றார்.
மேலும், கடற்படைத் தளபதியின் உத்தரவின் பேரில் இந்த சம்பவம் குறித்து அவர்கள் தனித்தனியாக உள்ளக விசாரணைகளை நடத்துவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
பண்டாரகமவில் வசிக்கும் அதிகாரி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டநிலையில் ஜூலை 19 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை