வீட்டுத் திட்டம் தொடர்பான இறுதிப் பட்டியல் எதிர்வரும் 19ஆம் திகதி - அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு
யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டு திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் வீட்டு திட்டங்களுக்கான பயனாளிகள் தெரிவு தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சகல பிரதேச செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று 12 ஆம் திகதி திங்கட்கிழமை வரை சகல பிரதேச செயலகங்களிலும் பயனாளிகள் பட்டியல் காட்சிப்படுத்தப்படும்.
வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பில் ஆட்சேபனை உள்ளவர்கள் எழுத்து மூலம் எதிர்வரும் 16.07.2021 முன்னர் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முறைப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு பிரதேச செயலகத்தால் எழுத்து மூலம் காரணம் தெரிவிக்கப்பட்டு மாற்றங்கள் ஏதும் நிகழுமானல்
அதனை சரிசெய்து 19ஆம் திகதி இறுதிப் பட்டியல் காட்சிப்படுத்தப்படும்.
பயனாளிகளுக்கு எழுத்துமலம்
தெளிவுகள் நற்றம்பள்ளி வழங்கல் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை