19 வயது யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ள 19 வயது யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திம்புளை - பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியை நேற்றைய தினம் தனது மூன்று நண்பிகளுடன் பார்வையிட சென்ற போது குறித்த யுவதி நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து கால் தவறி விழுந்து காணாமல்போயிருந்தார்.
இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணிகள் இன்று காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக திம்புளை - பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் லிந்துலை லென்தோமஸ் பகுதியில் வசித்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சியின் அடி பகுதியில் பாரிய கற்பாறைகள் உள்ளதாலும், நீர் வீழ்ச்சியில் அதிகளவில் நீர் விழுவதனை கருத்தில் கொண்டும் யுவதியை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை