22 வயது இளம் குடும்ப பெண் தொடர்பில் பொது மக்களிடம் தகவல் கோரும் உறவினர்கள்
வவுனியாவில் 22 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொக்குவெளி - மகாறம்பைக்குளம், அரசடி வீதியில் வசிக்கும் 22 வயதான கண்ணன் வினித்தா என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பெண் நேற்று முன் தின மாலை 6 மணியளவில் தனது அம்மாவின் வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பாத நிலையில் அவர் குறித்து உறவினர்கள், நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இது தொடர்பில் நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குடும்ப பெண் திருமணம் முடித்து ஐந்து வருடங்களாகும் நிலையில் சில நாட்களாக கணவரை பிரிந்து தாயாருடன் வாசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் காணாமல் போன குறித்த பெண் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப் பெற்றால் வவுனியா பொலிஸாருக்கோ அல்லது 0765462984 என்ற தாெலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை