அமிர்தலிங்கத்தின் 32வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழரசுக் கட்சியின் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு வலிமேற்கு பிரதேச சபையில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வலிமேற்கு பிரதேசசபையின் முன்னால் உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை