யாழ். காங்கேசன்துறையில் 344 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
இன்று (2021.07.12) காலை காங்கேசன்துறை பகுதியில் 344 கிலோ 560 கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது,
இந்தியாவில் இருந்து கடல்வழிப்பாதை மூலமாக கஞ்சா கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடற்படையினரால் மேற்கொளாளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சுமார் 344கிலோ 560 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகளுடன் மூவர், காங்கேசன்துறை கடலில் வைத்து கைது செய்யப்பட்டுளள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை பொலிஸில் கையளிக்கப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை