கடும் கண்காணிப்பில் பொலிஸார்! 417 பேர்வரையில் கைது
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 417 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய கைதுகளில் பெரும்பாலானவை கம்பளையில் இடம்பெற்றுள்ளது. அதன்படி கம்பளையில் 112 பேரும், கண்டியில் 55 பேரும் மற்றும் மத்தளையில் 45 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 47,240 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் கொழும்புக்கான 14 நுழைவாயில்களில் 7,062 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணிக்க முயன்ற 165 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை