• Breaking News

    சுமார் 777 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் தீயிட்டு அழிப்பு

    இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தில் மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் நேற்று மாலை தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஒரு மாத கால பகுதியில் மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.

    மன்னார் பொலிஸாரினால் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின் தாரபுரம் காட்டு பகுதியில் வைத்து அழிக்கப்பட்ட குறித்த 28 மூட்டைகளில் 777.6 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இதன்போது அப்பகுதிக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் பொலிஸார் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad