• Breaking News

    காரைநகரில் 98 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு, மூவர் கைது!

    இன்று (2021.07.06) காலை 8.30 மணியளவில் 98 கிலோக்கிராம் கேரளக் கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.


    இது தொடர்பாக மேலும் தெரியவருவது,


    இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கஞ்சாவினைக் கடத்தி வந்த மூவர் கடலில் வைத்து காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


    இதன்போது அவர்களிடமிருந்து 98 கிலோக்கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸில் கையளிக்கப்பட்டுள்ளனர்.


    மன்னாரைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளை நீதிமன்றிலே முற்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad