மன்னார் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை!
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
777 கிலோ 600 கிராம் எடையுள்ள மஞ்சள் மூட்டைகளுடனேயே நான்கு சந்தேக நபர்கள் உட்பட அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் செளத்பார் பகுதியில் இன்று காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே 777 கிலோ 600 கிராம் மஞ்சள் மூட்டைகளுடன் மன்னார் உப்புக் குளத்தைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களும் வான், முச்சக்கரவண்டி மற்றும் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகள் வாகனங்கள் சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை