மாபெரும் இரத்ததான முகாம்!
யாழ். மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் சங்கானை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9 ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் அ.சுஜிதரன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.சுகிர்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் மற்றும் வலிகாமம் பிரதேச சபையின் உறுப்பினர்களான க.இலங்கேஸ்வரன், எஸ். உமாபதி, யாழ். மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் த.தசிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை