பருத்தித்துறை முனையில் இந்திய மீனவர்கள் அட்டகாசம்!
எல்லை மீறிய இந்திய மீனவர்களால் யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்தொழிலாளர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் செய்யப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் கடலுக்கு சென்று வலைகள் கடலில் விடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று தமது வலைகளில் மீன்களை ஏடுப்பதற்காக படகுகளில் சென்று தேடியபோது பலரது வலைகள் காணாமல் போயுள்ளதுடன், பலரது வலைகள் வெட்டப்பட்டும் துண்டாடப்பட்டும் காணப்படுவதாக மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொருவருக்கும் தலா மூனறரை இலட்சம் பெறுமதியான வலைகள் நாசமாகியுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் பல தடவைகள் இடம் பெற்றுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கடற்றொழிலமைச்சரிடம் பல தவைகள் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கும் மீனவர்கள், கொரோனா காலத்தில் கடன்பட்டு வலைகளை கொள்வனவு செய்து தொழிலுக்கு செல்லும் நிலையில் இவ்வாறு வலைகள் வெட்டப்பட்டு நாசம் செய்யப்பட்டதனால் தமது வாழ்வாதராம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை