யாழ். காரைநகரில் இராணுவத்தால் வீட்டிற்கு அடிக்கல் நாட்டிவைப்பு!
இன்று (2021.07.13) யாழ். காரைநகர், களபூமியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கான வீட்டினை அமைப்பதற்கு, வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்த வீட்டிற்கான அடிக்கல்லினை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் நாட்டிவைத்தார்.
கொட்டில் வீட்டில் 16 வருடங்களாக வசித்து வந்த குடும்பத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு படும் கஷ்டத்தினை அவதானித்த இராணுவத்தினர் குறித்த வீட்டினை அமைப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடு அமைக்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை