அமெரிக்கா ரேஞ்சுக்கு யோசிக்கும் ஜனாதிபதி கோட்டா!
அமெரிக்காவிலுள்ள நடைமுறையை போன்ற இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திலும் மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்து கொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது ஊடக பேச்சாளரிடம் கேள்விகளைக் கேட்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும் இந்த அறை பயன்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாராந்திர ஊடக சந்திப்புகள் அங்கு நடைபெறும் என்றும் அதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டார். அமெரிக்காவிலும் இவ்வாறான நடைமுறை அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Get in Touch With Us to Know More

கருத்துகள் இல்லை